செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

துலாம்: தை மாத ராசி பலன்கள் 2020

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்) - கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் -  தைரிய ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன், புதன் -  பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
கிரகமாற்றங்கள்:
 
28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
உயர்வான எண்ணங்களை மனதில் கொண்டுள்ள துலா ராசியினரே, இந்த மாதம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். தடைபட்ட  பணம்  வந்து சேரும். பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். உங்களது செயல்கள் மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கும்.  ஆனால் மனதில்  ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள்  கிடைக்க பெறுவீர்கள்.
 
குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும். உடல் நலம் சீராக இருக்கும். நோயில் அவதிப்பட்டவர்களுக்கு  முன்னேற்றம் இருக்கும். 
 
தொழில் வியாபாரத்தில் இருந்த தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். எனினும் லாபம் அதிகரிக்கும். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். இரவு பகல் பாராமல் வேலை செய்ய வேண்டி வரலாம். 
 
கலைத்துறையினர் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். உங்கள் காரியங்களில்  மட்டும் எண்ணத்தைச் செலுத்தவும்.. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். 
 
அரசியல் துறையினருக்கு சமூகத்தில் செல்வாக்கு உயரும். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். உங்களின் தொகுதி செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். லாபத்தையும் பெறுவார்கள்.
 
பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இருந்த கோபம்  குறையும். உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண  திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.
 
சித்திரை 3, 4 பாதம்:
 
இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும். திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள். வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். அவசரத்தை தவிர்ப்பது  நல்லது. கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை  இருக்காது.  
 
சுவாதி:
 
இந்த மாதம் திட்ட மிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும்  பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள்.  தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு  வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 
 
விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
 
இந்த மாதம் வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.  விளையாட்டு மற்றும்  போட்டிகள் சாதகமாக  பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான  முடிவே உண்டாகும்.
 
பரிகாரம்: ”ஓம் ஸ்ரீமாத்ரே நம:” என 11 முறை சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.
அதிர்ஷ்டகிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 3, 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்:  ஜனவரி 27, 28.